Open exam for Audit Officer Vacancies 2026 – Sri Lanka State Audit Service

Open exam for Audit Officer Vacancies 2026 – Sri Lanka State Audit Service

Sri Lanka Gazette

Open exam for Audit Officer Vacancies 2026

இலங்கை அரச கணக்காய்வு சேவை ஆட்சேர்ப்பு 2026

கணக்காய்வு அலுவலர் (Audit Officer – Class III, Grade II)

ONLINE APPLICATION (விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்)

DOWNLOAD GAZETTE (வர்த்தமானி)

AUDIT OFFICER

வழிகாட்டல் குழுவில் இணைய கிளிக் செய்யவும்JOIN GROUP

1. பொது விபரங்கள் (General Information)

  • நிறுவனம்: கணக்காய்வு சேவை ஆணைக்குழு (Audit Service Commission)
  • பதவி: கணக்காய்வு அலுவலர் (Audit Officer – Class III, Grade II)
  • வெற்றிடங்கள்: 244
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மாத்திரம் (www.doenets.lk)
  • விண்ணப்ப ஆரம்பத் திகதி: 2026 செப்டம்பர் 14 (மு.ப. 09.00)
  • விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 ஒக்டோபர் 12 (பி.ப. 09.00)
  • பரீட்சை நடாத்தப்படும் இடம் & மாதம்: 2026 டிசம்பர் மாதம், கொழும்பில் மாத்திரம்

2. சேவை நிபந்தனைகள் & சம்பளம்

  • பதவி நிலை: நிரந்தரமானது மற்றும் ஓய்வூதியத்திற்குரியது (W&OP பங்களிப்பு கட்டாயம்).
  • தகுதிகாண் காலம்: 03 ஆண்டுகள் (இதற்குள் EB பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்).
  • அரசகரும மொழி: சுற்றறிக்கை 18/2020 இன் படி உத்தியோகபூர்வ மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • சம்பளக் குறியீடு: AS 01-2025 (பொது நிர்வாக சுற்றறிக்கை 10/2025 இன் படி)
  • சம்பள அளவுத்திட்டம்: ரூபா 64,610 – (10 × 1,190) – (11 × 1,360) – (15 × 1,670) – ரூபா 116,520/-
  • ஆரம்ப சம்பளம்: ரூபா 64,610/-

3. தகைமைகள் (Qualifications)

பொதுத் தகைமைகள்:

  • இலங்கைப் பிரசையாகவும் நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும்.
  • மதகுருமார் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • அனைத்துத் தகைமைகளும் 12.10.2026 அன்றோ அதற்கு முன்னரோ பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு (12.10.2026 அன்றையவாறு):

  • பொது விண்ணப்பதாரர்கள்: 22 – 28 வயதுக்குள் (பிறந்த திகதி: 12.10.1998 – 12.10.2004 இடைப்பட்ட காலம்).
  • அரச பணியாளர்கள்: அதிகபட்சமாக 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வி / தொழில்சார் தகைமைகள் (ஏதேனும் ஒன்று):

பிரிவு (அ) [கணக்கியல் / வணிகத் துறை]:

  • UGC அங்கீகாரம் பெற்ற கணக்கியல், வணிகம், வர்த்தகம் அல்லது அரச முகாமைத்துவம் தொடர்பான பட்டம்; அல்லது
  • CA Sri Lanka – Business Level / CAB II / தகுதிச்சான்று II / இடைநிலைப் பரீட்சையில் சித்தி; அல்லது
  • CMA Sri Lanka – முகாமைத்துவ மட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பரீட்சையில் சித்தி; அல்லது
  • SLIATE / தொழில்நுட்பக் கல்லூரியில் HNDA, HNDC அல்லது HNDM டிப்ளோமா பூர்த்தி செய்திருத்தல்.

பிரிவு (ஆ) [தகவல் தொழில்நுட்பத் துறை] :

Foreign Service applications

  • UGC அங்கீகாரம் பெற்ற வரி விதித்தல், IT, Computer Science, Computer Engineering அல்லது Computer Technology பட்டம்.

4. எழுத்துப் பரீட்சை முறைமை (600 புள்ளிகள்)

பரீட்சை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறும்.

இல.வினாத்தாள்நேரம்புள்ளிகள்
1பொது நுண்ணறிவு1½ மணி100
2படைப்பாற்றல், பகுப்பாய்வு & தொடர்பாடல்03 மணி100
3நிதிக் கணக்கியல் (Financial Accounting)03 மணி100
4கணக்காய்வு (Auditing)03 மணி100
5ICT அறிவு02 மணி100
6ICT முகாமைத்துவ உளச்சார்பு02 மணி100
  • தோற்ற வேண்டிய தாள்கள்:
  • – பிரிவு (அ): தாள்கள் 1, 2 மற்றும் (3 அல்லது 4 இல் ஒன்று).
  • – பிரிவு (ஆ): தாள்கள் 1, 2 மற்றும் (5 அல்லது 6 இல் ஒன்று).

5. பாடத்திட்டம் சுருக்கம் (Syllabus Summary)

  • 1. பொது நுண்ணறிவு: தர்க்கரீதியான பகுப்பாய்வு, முடிவெடுக்கும் திறன் (MCQ & அமைக்கப்பட்ட வினாக்கள்).
  • 2. படைப்பாற்றல் & தொடர்பாடல்: கட்டுரை வினாக்கள், கருத்துக்களைத் தொகுத்து வழங்குதல், சுருக்கியெழுதுதல்.
  • 3. நிதிக் கணக்கியல்: LKAS/SLFRS நியமங்கள், கம்பனிகள் சட்டம், காசுப்பாய்ச்சல் கூற்று, விகிதப் பகுப்பாய்வு.
  • 4. கணக்காய்வு: உள்ளகக் கட்டுப்பாடு, Auditing Standards, கணக்காய்வு அறிக்கை, தொழில்சார் ஒழுக்க நெறிமுறைகள்.
  • 5. ICT அறிவு: System Analysis, மென்பொருள் கட்டமைப்பு, ICT திட்ட முகாமைத்துவம்.
  • 6. ICT உளச்சார்பு: தகவல் தொழில்நுட்பப் போக்குகள், மென்பொருள் பராமரிப்பு சார்ந்த வினாக்கள்.

6. தெரிவு முறைமை & கட்டணம்

  • வெட்டுப்புள்ளி: ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40%, மொத்தமாகச் சராசரியாகக் குறைந்தபட்சம் 50% பெற வேண்டும்.
  • தெரிவு: எழுத்துப் பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும் (நேர்முகப் பரீட்சை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மட்டுமே).

7. ஆள் அடையாளம் & மண்டப விதிகள்

  • NIC, செல்லுபடியான கடவுச்சீட்டு (Passport) அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) கட்டாயம்.
https://drive.google.com/file/d/1ODGotbyidpm-d4-ACPz0l7iyqHRo7qYU/preview

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *